[X] Close >

“நெட்டு டூ நட்டு"- முதல் டெஸ்ட் போட்டி குறித்து அஷ்வினிடம் பகிர்ந்த நடராஜன்!

Indian-Fast-Bowler-T-Natarajan-answers-for-R-Ashwin-s-question-about-his-first-test-match-chance-to-play-against-Australia-at-the-Gabba-Test

இந்திய கிரிக்கெட் அணி காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் அறிமுக வீரர்களாக விளையாடி வருகின்றனர்.


Advertisement

இந்நிலையில் காயத்தினால் இந்த டெஸ்ட்டில் விளையாடாமல் உள்ள அஷ்வின் தொகுப்பாளராக மாறி “நெட் பவுலராக இருந்த நீங்கள் நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி உள்ளது?” என நடராஜனிடம் கேட்டிருந்தார். 


Advertisement

“ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நெட் பவுலராக இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்று தான் நினைத்தேன். வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப… ரொம்ப சந்தோஷமா இருக்கு” என நடராஜன் தெரிவித்துள்ளார். 

இந்த பேட்டியின்போது வாஷிங்டன் சுந்தரும், தாக்கூரும் உடன் இருந்தனர்.  

நன்றி : பிசிசிஐ


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close