ஜி 7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்பே இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகின் ஏழு முன்னணி ஜனநாயக பொருளாதார நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா - மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுதான் ஜி7 என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து இந்த ஜி 7 மாநாடு விவாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிந்ததன் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்விற்கான தனது இந்திய பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜி 7 மாநாட்டுக்கு முன்பே நாட்டிற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைத் தவிர, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளும் உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?