கிழக்கு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அதே தொகுப்பில் உற்பத்தி செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஐஸ்கிரீம்களை உற்பத்தி செய்த பெய்ஜிங்கின் அருகில் தியான்ஜினில் உள்ள தாகியோடாவ் ஃபுட் கோ, லிமிடெட் சீல் வைக்கப்பட்டு, அதன் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு வருவதாக நகர அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அந்த நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தொகுப்பில் உள்ள 29,000 அட்டைப்பெட்டிகளில் பெரும்பாலானவை இன்னும் விற்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தியான்ஜினில் விற்கப்பட்ட 390 பெட்டிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களில் நியூசிலாந்திலிருந்து பால் பவுடர் மற்றும் உக்ரைனிலிருந்து மோர் தூள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன என்று அரசாங்கம் தெரிவித்தது.
2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் மத்திய நகரமான வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் சீனாவிலிருந்து வெளிப்பட்டு பரவியது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி