நான் வழிகாட்டியாக இருக்கும் ‘மக்கள்பாதை’ அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக்கூடும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடையை அடுத்த ஆத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுகளை கண்டுகளித்த பின்னர் பேசிய சகாயம் “ 'மக்கள் பாதை' தொடர்ந்து சமூக மாற்றத்திற்காக களத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக்கூடும். நான் மிகவும் நேசிக்கக்கூடிய தமிழ் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விழித்தெழ வேண்டும், அதனை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு பரப்புரை செய்யவேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறேன்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர் “எம்முடைய தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்திருந்தால், அது நேர்மையான தலைவர்களை வெளிக்கொணர்ந்திருக்கும். நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இந்திய நாட்டில் மட்டுமின்றி உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும்.
இப்போது அந்த நேர்மைக்குறைபாடு நம் சமூகத்தில் இருப்பதை பார்க்கிறேன். அதனால்தான் மக்கள் பாதை தோழர்கள், இளைஞர்கள் நேர்மைச் சமூகத்தை உருவாக்க களமாடுகிறார்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நேர்மை சமூகத்தை உருவாக்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள், தகுதியுள்ள, நேர்மையுள்ள நெஞ்சுரமுள்ள இந்த இளைஞர்கள் அரசியல் களத்திலும் பங்கேற்கக்கூடும்” எனத் தெரிவித்தார்
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!