வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் வழக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் புதுச்சேரிக்கு மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பேட்டரி டார்ச் சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த சின்னத்தை ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டது. அதனால் மீண்டும் பேட்டரி டார்ச் சின்னத்தைக் கேட்டு மக்கள் நீதி மய்யம் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2) pic.twitter.com/MqzKEBiidR
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை