2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள்மீதான விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கக்கோரி சி.பி.ஐ, அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தினந்தோறும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2ஜி வ மேல்முறையீட்டு மனுக்கள்மீதான விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி