அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது 14 வயது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள அல்பானி நகர் அருகே இந்தியாவைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (57) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பூபிந்தர் சிங் தனது வீட்டில் வைத்து மகள் ஜஸ்லீன் கவுர் (14) மற்றும் அவரது மாமியார் மன்ஜீத் கவுர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, பின்னர் தன் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து காப்பாற்றுவதற்காக வந்த ராஷ்பால் கவுர் என்ற பெண்ணின் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து நியூயார்க் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'