கன்னியாகுமரி: திமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி: திமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி: திமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் உள்ள கோயிலுக்கு பொங்கல் விழாவிற்காக சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு ஊர்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பெருஞ்சகோணம் பகுதியில் அமைந்துள்ளது சக்திவினாயகர் தேவி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த வருடமும் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்த நிலையில் காலை முதல் பொங்கல் விழா நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மனோதங்கராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் அந்த கோயிலில் சமமத்துவ பொங்கல் கொண்டாட வந்தனர். அப்போது அங்கே இருந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள், யாரிடமும் அனுமதி வாங்காமல் ஊர் கோயிலில் வந்து அத்துமீறி இது போன்ற சம்பவத்தில் ஈடுபட முயற்சிப்பது சரியானதா என கேட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து வேறு மதங்களை சார்ந்தோரை நாங்கள் கோயிலில் அனுமதிக்கமட்டோம் என்றும், அதுபோல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சியை சார்ந்தவரை எப்படி கோயிலில் அனுமதிக்கமுடியும் என கடுமையாக எம்.எல்.ஏ மனோதங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கோயில் வளாக கேட்டை மூடி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊர்மக்களே நடத்தட்டும் என்று கூறி எம்.எல்.ஏ மனோதங்கராஜை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதையடுத்து அங்கு பாஜகவினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜிடம் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோயில் வளாக கேட்டுகளை இழுத்து மூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com