நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதை தயாரித்து வருகிறார். யுவான்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக வெளியான புதிய போஸ்டரில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் எதிரும் புதிருமாக நிற்கின்றனர்.
அதை வைத்து பார்க்கும் போது படத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரி போல தெரிகிறது. கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ், ரவிகாந்த் மாதிரியான நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்து வருகின்றனர்.
சுமார் 1.04 நிமிடங்கள் ஓடும் இந்த மோஷன் போஸ்டரில் சிம்பு துப்பாக்கியுடன் அரசியல் கட்சி மாநாட்டில் யாரையோ பழிவாங்க செல்வது போல தெரிகிறது. இதற்கு யுவனின் இசையும் அற்புதமாக உள்ளது. இதுவொரு அரசியல் சார்ந்த படம் என்பதற்கு ஏற்றார்போல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!