மதுரை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அப்போது ராகுல் காந்தி விமான நிலையத்திற்கு செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்