வருமான வரி படிவத்தில் ஆதார் எண் கட்டாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வருமான வரித் தாக்கல் படிவத்தில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது மத்திய பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது.


Advertisement

வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது‌. இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது‌.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement