விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கூமாப்பட்டி பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கூமாப்பட்டி - பிளவக்கல் அணை செல்லும் கோவிந்தமேடு பாலம், பட்டுப்பூச்சி பாலத்திற்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும், கூமாப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஜப்பார் என்பவருக்கு சொந்தமான தேங்காய் பேட்டைக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. மீராகுசேன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் 100-க்கும் மேற்பட்ட சிமெண்ட் மூடைகள் நாசமானது.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்