[X] Close >

அதானி குழும காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அதிமுக, பாஜக அரசுகள் உதவுவது ஏன்?: மு.க.ஸ்டாலின்

DMK-leader-and-Tamil-Nadu-opposition-leader-MK-Stalin-has-said-that-it-is-very-painful-to-gain-for-the-Adani-Group-that-the-economic-interests-of-Tamil-Nadu-are-being-disrupted-by-BJP-and-ADMK-Government

சூழலியல் பாதிப்புகளை உருவாக்கும் அதானி குழும காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அதிமுக - பாஜக அரசுகள் உதவுவது ஏன்? என திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

அது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். “அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு தேவியான நிலங்களை பொது மக்களிடமிருந்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு கழத்திடமிருந்தும் அள்ளிக் கொடுக்க பொது மக்களின் கருத்துக் கேட்கும் பொது விசாரணை அறிவிக்கப்பட்டு அதிகார துஷ்பிரயோகம் நடைபெற இருக்கிறது. 

1967 ஏக்கர் அளவிற்கான பரப்பளவை மணல் கொட்டி - நிலத்தின் தன்மையை  உருமாற்றி துறைமுக விரிவாக்கம் ஏன்? 

82 மீனவ கிராமங்களில் உள்ள 1 லட்சம் மீனவர்கள் இந்தப்பகுதியின் மீன்  நம்பி இருக்கிறார்கள். இத்திட்டத்தால் மீனவ  கிராமங்கள் கடலுக்குள் போகும். 


Advertisement

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, உவர் நீர் ஏரியான பழவேற்காடு அழிந்துபோகும். 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள35 லட்சம் மக்களுக்கு வெல்ல அபாயத்தில் மூழ்கும் அபாயம் இருக்கும். 

ஆரணி - கொற்றலை ஆற்றின் நன்னீர் பாதிக்கப்பட்டு இந்த ஆறுகளே  காணாமல் போகும். 

image

இந்த விரிவாக்க  திட்டம் மக்களுக்கும் - சூழலியலுக்கும் பரம விரோதியாக அமைந்திருக்கிறது என்பதை அதனிக்காக வரிந்து  காட்டும் பாஜக - அதிமுக அரசுகள் யோசித்துப் பார்க்கவில்லை. 

இந்த திட்டத்தை முன்னெடுத்து  செல்லும்  நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் எடுக்கக் கூடாது” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close