மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள சுமார் 60 கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜன் நாயக் ஜனதா கட்சியின் தலைவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்துள்ளனர் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள்.
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்போம் என்ற தீர்மானத்தை தங்களது தீர்மானமாக பஞ்சாயத்தில் இந்த கிராம மக்கள் நிறைவேற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஹரியானாவில் உள்ள பாஜக தலைவர்களை முற்றுகையிட்டு மக்கள் போராடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக ஹரியானா மாநில முதல்வர் பங்கேற்க இருந்த மாநாட்டையும் விவசாயிகள் முற்றுகை இட்டிருந்தார். இந்த மாநாட்டில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பெரும் நன்மைகளை குறித்து விளக்க நடத்த திட்டமிட்டதாகவும் தெரிகிறது.
நன்றி : TIMES NOW
Loading More post
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்