வகை வகையான கடிகாரங்களை சேகரித்து வரும் சென்னையை சேர்ந்த கணினி தொழில்நுட்பவியலாளர் ராபர்ட் கென்னடி, தன் இல்லத்தையே அருங்காட்சியமாக மாற்றியிருக்கிறார்.
நம் வாழ்க்கையின் நொடிப்பொழுதையும் வீணாக்காமல் இருக்க மனிதனே மனிதனுக்காக தயாரித்த அற்புதக்கருவி தான் கடிகாரங்கள். கடிகாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் மணி முள்ளையும், நொடி முள்ளையும் பார்த்துத்தான், மனிதர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. நேரம் காட்டும் கடிகாரங்களை வகை வகையாய் சேகரிப்பதிலேயே, கிடைக்கும் நேரத்தை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார் திரு.ராபர்ட் கென்னடி. இதுவரை 2250 க்கும் மேற்பட்ட கடிகாரங்களைச் சேகரித்து வைத்திருக்கும் இந்த கடிகார விரும்பி, இதற்கு மட்டும் ஏறக்குறைய 60 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். இவைகளைப் பராமரிக்க மட்டும் மாதந்தோரும் 25000 ரூபாய் செலவிடுகிறார். தன்னுடைய இல்லத்தில் வைத்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு வரவும் முயற்சித்து வருகிறார்.
இவரின் இந்த கடிகார சேகரிப்புக்கு 35 வருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கும் இவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்புமே காரணம் என்கின்றனர் இவரின் குடும்பத்தினர். நேரத்தைச் சுமந்து நிற்கும் இந்த கடிகாரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும், ஒரு நினைவுகளைச் சுமந்து நிற்கிறார் இந்த கடிகார மனிதர்.
பொழுதுபோக்கு என்ற சொல்லை அகராதியில் இருந்தே அகற்ற வேண்டும். போக்குவதற்கு அல்ல பொழுது, ஆக்குவதற்கு… என்பதை தான் வாழ்ந்த வழியிலேயே காட்டியிருக்கும் இவர், வாழ்க்கையை அழகானதாக மாற்ற கிடைக்கும் நேரத்தையெல்லாம் பயனுள்ளதாய் மாற்றுதல் சிறப்பு என்கிறார் இந்த கடிகாரக் காதலர்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு