யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
Chennai Talk என்ற யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், 'பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்
இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ யுடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில், பதிவு செய்த வீடியோக்களை நீக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதே போல யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்