விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் 'மாஸ்டர்' திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு வருகின்றனர். கடந்த 9 மாதங்களாகக் காத்திருந்த ரசிகர்கள் இன்று திரையரங்குகளில் மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ டி-ஷர்ட்டை அணிந்து வந்து உற்சாகத்துடன் படம் பார்த்தனர்.
’மாநகரம்’, ’கைதி’ வெற்றிகளைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த, 'மாஸ்டர்' திரைப்படம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என படக்குழு உறுதியாக அறிவித்தது. பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' திரைப்படம் இன்று வெளியானது.
சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தின் முதல் காட்சி, அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. 'மாஸ்டர்' வெளியீட்டை ரசிகர்கள் மேள தாளத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.
பல ரசிகர்கள், ‘வாத்தி கம்மிங்’ வரிகளுடன் விஜய் படம் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்துவந்து உற்சாகமுடன் காணப்பட்டனர். இன்னும் சிலர், ஏற்கெனவே வெளியான மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’, ’சர்கார் தீபாவளி’ என விஜய்யின் பல்வேறு படங்களின் டி-ஷர்ட்டுகளையும் அணிந்து வந்து கொண்டாட்டத்துடன் படம் பார்த்தனர்.
Loading More post
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்