செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘செல்வராகவன் 12’ படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகும் என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’, ’புதுப்பேட்டை’, ’மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து தனுஷ் செல்வராகவன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை தாணு தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா எட்டாவது முறையாக இணைந்திருக்கிறார். ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கு முன்பாக இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து ‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’ படங்கள் வெளியீட்டுக்கு தயாராய் இருக்கின்றன.
அடுத்ததாக, கார்த்திக் நரேன் இயக்கத்திலும், மித்ரன் ஜவகர் இயக்கத்திலும், ராம்குமார் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தற்போது, கார்த்திக் நரேன் இயக்கும் படம், செல்வராகவனின் படத்தை முடித்துக்கொடுக்கும் பணியில் முழு வீச்சில் இறங்கி இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், நாளை இரவு 7.10 மணிக்கு தனுஷ் படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
Loading More post
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்