இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அவரை மீண்டும் பரிசோதித்ததில் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்து ஓபன் 2021இல் விளையாட சாய்னா பேங்காக் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#BWF can also confirm singles matches of @NSaina and @parupallik – declared a walkover earlier today – will now be rescheduled for tomorrow.#HSBCbadminton #BWFWorldTour
— BWF (@bwfmedia) January 12, 2021Advertisement
“இந்திய பேட்மின்டன் வீரர்கள் சாய்னா நேவால் மற்றும் எச்.எஸ்.பிரனாய்க்கு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட கொரோனா பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்” என இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலையில், தொற்று பாதிப்பு உறுதியானதால் சாய்னாவும், பிரனாயும் தாய்லாந்து ஓபன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்ததை அடுத்து இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதனை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது. இருவரும் முதல் சுற்று போட்டியில் விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.சிந்து முதல் சுற்றில் பெற்ற அதிர்ச்சி தோல்வியினால் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு