வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய பின்னர், ட்விட்டரில் இருந்து அவரின் ஆதரவாளர்களின் கணக்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களில் ஒரு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது வன்முறை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடைய 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுத்திவைத்ததாக ட்விட்டர் நேற்று அறிவித்தது.
"வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்த சிறிது நேரத்திலேயே, ட்விட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நடந்த எங்கள் முயற்சிகளின் விளைவாக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு தனி நபர் பல கணக்குகளை இயக்கும் பல நிகழ்வுகளையும் கண்டறிந்தோம்" என ட்விட்டர் தெரிவித்தது.
நவம்பர் 3-ஆம் தேதி வெளியான அமேரிக்க தேர்தலின் முடிவை ஏற்க மறுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய ட்ரம்பின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன. இந்த இரு தளங்களும் எதிர்கால வன்முறை அபாயத்தைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்பதற்கு முன்பு, ஜனவரி 17 ம் தேதி அமெரிக்க கேபிடல் மற்றும் ஸ்டேட் கேபிடல் கட்டடங்கள் மீது இரண்டாவது தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக இவை கூறியது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு