மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் வருகின்ற 16 ஆம் தேதியில் கொரோனாத் தடுப்பூசியானது செலுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, தடுப்பூசிகளுக்கு அமைச்சர்கள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும் போது அரசியல் வாதிகள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் கூறியுள்ளார் . மேலும் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?