மதுபோதையில் மயங்கி கிடந்த பள்ளி மாணவர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவர்கள் இரு‌வர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தது அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement

பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்‌கள் இரண்டுபேர், பள்ளி நேரத்தில் வெளியில் சென்று மது அருந்திவிட்டு பள்ளி அருகிலேயே போதையில் மயங்கி விழுந்து கிடந்தனர். இதனையறிந்த பள்ளி ஆசிரி‌யர்கள் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். பள்ளி உடையிலேயே மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த மாணவர்களை நினைத்து அப்பகுதியினர் வேதனையடைந்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement