இந்தியாவுக்கு வெளியே ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வெளியே ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் வெளியிட்டால் ஈஸ்வரன் படத்தை வெளியிடமாட்டோம் என்று கூறினர்.
திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையடுத்து ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது. ஈஸ்வரன் படத்திற்கான காட்சிகளை திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?