[X] Close >

உ.பி: இளைஞர் மரணம் - காதலியை விசாரித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்

Boyfriend-strangled-to-death-friend-of-his-lover-in-UP

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலியுடன் உறவு வைத்திருந்த நபரை காதலர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

உத்திர பிரதேச மாநிலம், கெரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ஜீத் குமார் என்பவர் கடந்த புதன் கிழமை காணாமல் போனார். பின்னர், அவரது சடலமானது அடுத்த இரண்டு நாட்களில் சன்சி கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், முதற்கட்டமாக சர்ஜீத்தின் செல்போனைக் கைப்பற்றி அதிலுள்ள தகவல்களை ஆராய்ந்தனர். அதில் அவர் ஒரு பெண்ணுடன் தொடர்ச்சியாக பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அழைத்து விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


Advertisement

image

விசாரணையில் சம்ந்தப்பட்ட பெண் கூறியதாவது, “ எனது கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இழந்தேன். அதன் காரணமாக எனது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்காக, சரீஜீத் மற்றும் ஹர்பால் ( தூரத்து உறவினர்) ஆகிய இருவரையும் காதலித்து வந்தேன். இந்த உறவு ஹர்பாலுக்கு தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் சர்ஜீத்திற்கு விஷயம் தெரிய வர கடந்த புதன்கிழமை எனக்கும் அவருக்கு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது எனது வீட்டிற்கு வந்த ஹர்பால் கோபத்தில் சர்ஜீத்தை கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதனையடுத்து நானும் ஹர்பாலும் சர்ஜீத்தின் சடலத்தை சன்சி கிராமத்தில் விட்டுசென்றோம் ” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close