சிங்கத்துடன் சண்டையிட்டு அதனை விரட்டிய நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
காட்டு விலங்குகளில் ‘கெத்து’ என்று சொல்லப்படுவது சிங்கம்தான். ஆண், பெண் என இருவரின் வீரத்தையும் சிங்கத்தோடுதான் தொடர்பு படுத்துவார்கள். அப்படியொரு தனித்துவ புகழ் காட்டு விலங்குகளில் சிங்கத்திற்கே உண்டு. பார்த்தாலே பயம் வரவைக்கும் சிங்கத்தை நாய் ஒன்று குலைத்தும் வீரத்துடன் சண்டையிட்டும் துரத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
’Parveen Kaswan, IFS’ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பார்வையாளர்கள் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களை பின்தொடர வரும் சிங்கத்தை அங்கிருக்கும் நாய் துணிச்சலுடன் சண்டையிட்டு துரத்துகிறது.
அதுவும் ஒரு சிங்கமல்ல. இரண்டு சிங்கங்கள். நாயின் குலைக்கும் சத்தத்தோடு துணிச்சலான சண்டையால் பயந்து போன சிங்கங்கள் அங்கிருந்து தப்பிக்கின்றன. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ”வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு நம்பிக்கை தேவை” என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பகிர்ந்திருக்கிறார், அவர். பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நாயின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.
Need this much confidence in life. Dog vs Lion. It also highlights issue of stray dogs & wildlife interaction. @zubinashara pic.twitter.com/lNu7X4ALm5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2021Advertisement
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்