நேற்று ’200 ரன் கூட அடிக்கமாட்டார்கள்’ என்று சொன்ன ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இன்று இந்திய அணியின் ஆட்டத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னிடெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக டிரா செய்துள்ளது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. முன்னதாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம் தான் என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து அசந்து போன அவர் அது குறித்து ட்விட்டரில் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார். “இன்றைய நாள் முழுவதும் ஆட்டத்தில் இந்தியா உறுதியுடன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களத்தில் போராடியது. பண்டில் தொடங்கி புஜாரா, விஹாரி மற்றும் அஷ்வின் என அனைவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குபிடித்ததோடு ஆட்டத்தை கண்ட்ரோலில் வைத்திருந்தனர். அது பார்க்கவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போதைக்கு பிரிஸ்பேன் போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Loved the fight and determination of India all day today. Starting with Pant and Pujara, and then for Vihari and Ashwin to withstand Australia and look largely in control for most of the day was very impressive. Can't wait for Brisbane now. #AUSvIND — Ricky Ponting AO (@RickyPonting) January 11, 2021
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?