''நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது'' என உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்
திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. பாஜகவின் குஷ்பு, டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?