ராதாமோகனுக்கு விருது கொடுக்கக் கூடாது: பட்டுக்கோட்டை பிரபாகர் எதிர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2011ஆம் ஆண்டிற்கான சிறந்த கதையாசிரியர் விருதை இயக்குநர் ராதாமோகனுக்கு வ‌ழங்கக்கூடாது எ‌ன எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் முதலமைச்சர் தனிப்பிரிவில் ‌மனு அளித்துள்ளார்.


Advertisement

பயணம் திரைப்படத்தின் கதை‌, தான் எழுதிய இது இந்தியப்படை என்ற நாவலின் கதையென்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ராதாமோகனுக்கு தகவல் தெரிவித்திருந்ததாகவும் அவரும் கதை ஒன்றாக இருப்பதை ஏற்றுக் கொண்டு ஊடகங்களில் அறிவிக்க இருந்தார் எனவும் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பயணம் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதையாசிரியர் விருது ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பட்டுக்கோட்டை பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement