'இந்தியா 200 ரன்களை தாண்டாது' என்ற பாண்டிங்கின் கருத்துக்கு சேவாக் ட்விட்டரில் கிண்டலாக பதிலளித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின் வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. அப்போது கருத்து தெரிவித்த ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், “ஆஸ்திரேலிய அணியின் பலமான பவுலிங் கூட்டணி இந்திய வீரர்களை கட்டுப்படுத்தி மிகச் சுலபமாக இந்த போட்டியில் வெல்லும். எனக்கு தெரிந்து இந்தியா 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம்தான். அது தான் நிஜமும் கூட” எனத் தெரிவித்தார். ஆனால் இன்றைய நிலவரப்படி இந்தியா 250 ரன்களை தாண்டி சென்றுவிட்டது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள விரேந்தர சேவாக், ரிக்கி பாண்டிங்கை கலாய்க்கும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் போது ரிக்கி பாண்டிங்கை ரிஷப் பண்ட் ஒளிந்திருந்து பார்ப்பது போல இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார் சேவாக். அதாவது, இந்தியா 200 ரன்களை தாண்டாது என்ற கருத்தை ரிஷப் பண்ட் முறியடித்துவிட்டார் என ஒரு போட்டோ மூலமே சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி தற்போது 272 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. ரிஷப் பண்ட் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.தற்போது புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஜோடியாக ஹனுமா விகாரி களத்தில் உள்ளார்.
https://t.co/Z8zqkzZGNe pic.twitter.com/hKPAa3FLoc
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?