[X] Close >

‘லவ் ஸ்டோரி’ படத்தில் போட்டிபோட்டு நடித்துள்ள நாக சைதன்யா - சாய் பல்லவி: வெளியானது டீசர்

விரைவில் வெளியாக உள்ள தெலுங்கு மொழி திரைப்படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில்  நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ரொமன்டிக் டிராமா ஜானரில் இந்த படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் சாய் பல்லவியின் நடிப்பில் ஃபிடா படத்தை இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

image

நடிப்பில் யார் சிறந்தவர் என்பதை வெளிக்காட்டும் அளவிற்கு நடிகர் நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் நடிப்பில் அசத்தி உள்ளனர். அது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. 60 நொடிகள் ஓடும் டீசரில் நாயகனும், நாயகியும் நடன கலைஞர்கள் என்பது தெரிகிறது. 


Advertisement

ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இருவரும் அவர்களது காதல் கதையில் எதிர்வரும் தடைகளை எப்படி கடக்கிறார்கள் என்பது திரைக்கதையாக சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close