13 கோடிப் பேர் இடம் பெயர நேரும்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 13 கோடிப் பேர் இடம் பெயர நேரிடும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


Advertisement

ஆசிய வளர்ச்சி வங்கியும் பாட்ஸ்டாம் என்ற அமைப்பு இணைந்து இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியா, சீனா, வங்கதேச‌ம், இந்தோனோசியா ஆகிய நாடுகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் தாழ்வான கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் 13 கோடி மக்கள் இந்த நூற்றாண்டின் இறுதியில் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் பருவ நிலை மாற்றப் பிரச்னையால் 2030ம் ஆண்டு தென்னி‌ந்தியாவில் அரி‌சி ‌விளைச்சல் 5 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement