டிராக்டர் மீது லாரி மோதிய, பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள மதிரா நகரில், கடந்த சனிக்கிழமை இரவு 10.24 மணியளவில், டிராக்டரை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், அதனை ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஓரமாக ‘பார்க்’ செய்ய முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
லாரி மோதிய வேகத்தில் டிராக்டர் சுக்கு நூறாக நொறுங்கி நாலாபுறமும் சிதறியது. இதில் டிராக்டர் டிரைவர் ராமநர்சயா தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்தார் டிராக்டர் டிரைவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து மதிரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிவந்த லால் பஹ்சா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். லால் பஹ்சா மது போதையில் லாரி ஓட்டினாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு