பாகிஸ்தானின் மின்பகிர்மான முறையில் மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டின் பல நகரங்கள் நேற்றிரவு இருளில் மூழ்கின.
பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான இஸ்லமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் உள்பட பல நகரங்கள் நள்ளிரவில் இருளில் மூழ்கின.
மின் தடைக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘’தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் ஐம்பதில் இருந்து திடீரென பூஜ்ஜியத்திற்கு சென்றதே மின்விநியோகம் தடை பட்டதற்கு காரணம். அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்”என பதிவிட்டார்.
இதற்கிடையே, மின் தடையால் கடும் அவதி அடைந்த பாகிஸ்தானியர்கள் சமூக வலைத்தளங்களில் மின் தடை குறித்து பதிவிட்டனர். இதனால், ட்விட்டரில் மின் தடை குறித்த பதிவுகள் ட்ரெண்ட் ஆனது.
பல மணிநேரத்துக்குப்பின் இன்று அதிகாலை முதல் பல்வேறு நகரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டது. இதுதொடர்பாகவும் மின்துறை அமைச்சர் கான் ட்விட்டரில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்