வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி டெல்லியிலும், டெல்லி எல்லைகளிலும் விவசாயிகள் கடந்த 47 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-வது பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், வருகிற 15 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சிங்கு எல்லையில் போராடி வந்த பஞ்சாப் மாநிலம் பதேகார்க் பகுதியைச் சேர்ந்த 40 வயது விவசாயி அமரீந்தர் சிங் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும், விவசாயம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் வரும் சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 'கிசான் ஆதிகர் திவாஸ்' போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 15 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ராஜ் பவன்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 9 வது சுற்று பேச்சுவார்த்தையும் அதே நாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?