நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி ‘ஆன்மிக அரசியல் அழைப்பு விழா’ என்ற பெயரில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் நாளை காலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டமானது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினி சவுந்தர் மற்ற ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்கில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அறப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தன்னுடைய உடல்நலத்தைச் சுட்டிக்காட்சி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்