டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று 100 இங்கிலாந்து எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சூழலில் இங்கிலாந்து எம்.பிக்கள் 100 பேர், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இங்கிலாந்து எம்.பியான தன்மன்ஜீத் சிங் தேசி, இங்கிலாந்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ இந்தியாவில், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பல இலட்சம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக போராடும் விவசாயிகள் மீது அரசு பல்வேறு அடக்குமுறைகளையும் நடத்திவருகிறது.
இங்கிலாத்தின் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தீவிரமான அக்கறை கொண்டு அமைதியான இந்தியாவை உருவாக்க வேண்டும். போரிஸ் ஜான்சன் இந்திய பிரதமருடன் அடுத்தமுறை தொடர்பு கொள்ளும்போது இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும், தற்போதைய முட்டுக்கட்டைக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
Great that over 100 MPs and Lords signed cross-party letter to the Prime Minister, given our serious concerns for the peaceful India #FarmersProtest.
Boris Johnson must raise it with Indian PM when they next liaise, expressing hopes of speedy resolution to the current deadlock. pic.twitter.com/mLw3tYHA2S
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்