இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது. மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ள நிலையில், இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:
இது குறித்து அங்குள்ள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும் போது, “ ஜகார்த்தா வடக்குப் பகுதியில் உள்ள கடலின் அருகே சில விமான பாகங்கள் இருக்கிறது என மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று இந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ், இரும்பு பாகங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்ததாகத் தெரிவித்தார். அந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு