இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி கொடுத்த கேட்சை இரண்டு முறை டிராப் செய்துள்ளார். 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான விக்கெட் கீப்பர் என்ற வேதனை கொடுக்கும் சாதனையை படைத்துள்ளார். அதற்கு காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நழுவவிட்ட கேட்ச்கள் தான்.
பேட்டிங்கிலும் பெரிய பங்களிப்பு கொடுக்காமல், விக்கெட் கீப்பிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வரும் பண்டுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் வைக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். அனுபவ வீரர் சாஹாவுக்கு பதிலாக பண்ட் தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார். எப்படியும் அடுத்த போட்டியில் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்ற பேச்சுகளும் எழுகின்றன. அவருக்கு கீப்பிங்கில் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர் முன்னாள் வீரர்கள்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த போது இடது முழங்கை பகுதியில் காயம்பட்டிருந்தார். அதை ஸ்கேன் செய்து பார்த்ததில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்