[X] Close >

'மாஸ்டரை சந்தித்த மாணவர்' - விஜய்யை சந்தித்த காளிதாஸ் ஜெயராம்

kalidas-jayaram-meets-vijay

’மாஸ்டர் சந்தித்த மாணவன்’ என்று நடிகர் காளிதாஸ் ஜெயராம் விஜய்யை சந்தித்துள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சுதா கொங்கராவின் ’புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

image


Advertisement

காளிதாஸ் விஜய்யின் தீவிர ரசிகர். சமீபத்தில்  ஒரு பேட்டியில்கூட “நான் விஜய் சாரின் தீவிர ரசிகர். மனம் சோர்வுறும் போதெல்லாம் அவரது  பேச்சுக்களைக் கேட்டு உற்சாகமாகிக்கொள்வேன். அவரது குட்டிக் கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன்’ என்று தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விஜய் பட அறிவிப்பின்போது விஜய்யின் புகைப்படங்களும் வீடியோக்களும் கடைசியாக  வெளியானது. அதன்பிறகு, இப்போதுதான் விஜய் காளிதாஸ் ஜெயராமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.


Advertisement

இந்தப் புகைப்படத்தை காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்து “ மாஸ்டரை சந்திக்கிறார் மாணவர். நேரம் ஒதுக்கியதற்கு நன்றி விஜய் சார்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனை, விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close