7 வருடங்களுக்கு முன்பு இறந்த தந்தையின் புகைப்படத்தை கூகுள் எர்த்தில் கண்டுபிடித்த மகன்!

7 வருடங்களுக்கு முன்பு இறந்த தந்தையின் புகைப்படத்தை கூகுள் எர்த்தில் கண்டுபிடித்த மகன்!
7 வருடங்களுக்கு முன்பு இறந்த தந்தையின் புகைப்படத்தை கூகுள் எர்த்தில் கண்டுபிடித்த மகன்!

7 வருடங்களுக்கு முன்பு இறந்த தந்தையின் புகைப்படத்தை ஒரு இளைஞர் கூகுள் எர்த்தில் கண்டுபிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பல வருடங்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள இடங்கள் மற்றும் மனிதர்களை கண்டுபிடிக்க கூகுள் எர்த்( Google Earth) என்ற செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த மனிதர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தந்தையின் புகைப்படத்தை கூகுள் எர்த்தில் கண்டுபிடித்ததை ட்வீட் செய்திருந்தார். இது தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் பயனரான @TeacherUfo என்பவர் பொதுமுடக்கத்தால் வீட்டில் சலிப்பாக இருக்கும்போது கூகுள் எர்த்தில் தனது வீட்டைத் தேடியிருக்கிறார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தந்தை வீட்டின் மும்பு நிற்பதை கண்டறிந்திருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிடுகையில், ’’7 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன எனது தந்தையை பார்த்தேன். அவர் என் அம்மா வீட்டிற்கு வருவதற்காக வாசலில் காத்திருந்தார். அவர் ஒரு இனிமையான மனிதர்’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், தங்கள் வீதியின் புகைப்படத்தை மாற்றவேண்டாம் என்றும் கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த ட்வீட்டை 6 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்திருக்கின்றனர். அதேவேளையில் 7 வருடங்களாக கூகுள் எர்த் இடத்தை அப்டேட் செய்யவில்லையா என சிலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூகுள் எர்த்தில் கண்டுபிடிக்கப்படுபவை வைரலாவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு 400 அடி நீளமுள்ள ஐஸ் கப்பலை அண்டார்டிகா கடலில் கண்டறிந்த வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com