[X] Close >

பல கெட்டப் விக்ரம்.. ஸ்டைலிஷ் வில்லன் இர்பான்.. மேக்கிங்கில் மிரட்டும் ‘கோப்ரா’ டீசர்!

vikram-cobra-teaser-released

விக்ரமின் ’கோப்ரா’ டீசரை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.


Advertisement

image

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் ’இமைக்கா நொடிகள்’ வெற்றிப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ஹாட்ரிக் வெற்றிகொடுக்க ‘கோப்ரா’ படத்தில்  இணைந்துள்ளார் விக்ரம். இதில், விக்ரம் ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.


Advertisement

image

படத்தின் டீசரில் விக்ரம் கணித வல்லுநர் மதியாக நடித்திருக்கிறார். விக்ரமா இது? என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு பல்வேறு கெட்டப்புகளில் ஆச்சர்யமூட்டுகிறார்.  ’இமைக்கா நொடிகள்’ போலவே ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதை என்பதை டீசர் உணர்த்துகிறது.  வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அசத்துகிறார். டீசரின் மேக்கிங் வீடியோ பிரம்மாண்டமாக மிரட்டுவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close