[X] Close >

'புரியாமல் போன சோகம்' - எப்படி இருக்கிறது மாதவன், ஷ்ரத்தாவின் 'மாறா'?

Maara-Movie-Review-

2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் ப்ரக்காட் இயக்கத்தில் வெளியான படம் 'சார்லி' இப்படத்தின் தமிழ் ரீமேக் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மெளலி, குரு சோமசுந்தரம் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. இப்படத்தை இயக்கி இருக்கிறார் திலீப் குமார்.


Advertisement

சிறுவயதில் ஒரு மழைக்கால பேருந்துப் பயணத்தில் பாரு என்ற சிறுமியொருத்தி கதை கேட்கிறாள். சக பயணியாக வரும் கன்னிகாஸ்திரி பெண்ணொருவர் பாருவிற்கு சிப்பாயொருவன் மீன் தேடிப் போன கதையொன்றைச் சொல்கிறார். அச்சிறுமியின் மனதில் அக்கதை மிக ஆழமாக பதிந்துவிடுகிறது. இளம்பெண்ணாக வளர்ந்த பாருவே கதையின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். மோசமான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை, அதன் பழந்தன்மை மாறாமல் பராமரிக்கும் வேலையில் ஆர்முள்ள பெண்ணாக அவர் வருகிறார். வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் வெளியேறும் ஷ்ரத்தா, சிறுவயதில் கேட்ட சிப்பாய் மீன் கதையின் காமிக் வடிவமானது மாறாவாக நடித்திருக்கும் மாதவனின் வீட்டில் கிடைக்கிறது. அதனை பின்பற்றி நகரும் திரைக்கதையில் நாயகி சந்திக்கும் கதாபாத்திரங்களும், அவர்களுக்கு இடையே இருக்கும் கதைத் தொடர்பும்தான் திரைக்கதை. உண்மையில் இது நாயகி மையக் கதைதான்.

image


Advertisement

ரீமேக் சினிமாவில் இருக்கும் அதே சிக்கலை 'மாறா'வும் சந்தித்திருக்கிறது. 'சார்லி'யில் இருந்த ஆன்மா இப்படத்தில் இல்லை. எம்.எஸ்பாஸ்கர், கிஷோர், மெளலி, குரு சோமசுந்தரம், அபிராமி என திறமையான பலர் இப்படத்தில் பங்கேற்றிருந்தாலும், அவர்களை சரியாக திரைக்கதையில் டியூன் செய்யத் தவறியிருக்கிறார் இயக்குநர் திலீப் குமார். சரியாக டியூன் செய்திருந்தால் அழகான இசையாக 'மாறா' இருந்திருப்பார்.

ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கும் அலெக்ஸாண்டர் பாபு இப்படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓரளவு தன் வேலையை அவர் சரியாகவே செய்திருக்கிறார் எனலாம். தற்கொலைக்கு முயன்று மீண்டு மறுவாழ்வும் ஷிவதா க்யூட். சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்களில் மனதில் பசையாக ஒட்டுகிறார்.

image


Advertisement

மாதவனின் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக மாறா அமையாதது ஒரு குறைதான் என்றாலும். க்யூட்னஸ் ஓவர் லோடடு என்று ரசிக்கும்படியே வலம் வருகிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் அபிராமிக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக இவரது தனிப்பட்ட வாழ்வு இக்கதையில் துயரமானதாக இருக்கிறது. மொத்த திரைக்கதையில் ஒரு மலர்போல சில காட்சிகள் வந்துபோகும் அபிராமி மனதில் நிறைகிறார்.

image

ஜிப்ரான் இசையில் தாமரையின் வரிகள் இதம். ஒளிப்பதிவிற்கு சவாலான மலைப்பகுதியில் தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளி அமைப்பும், கோணங்களும் அழகு. மலையாளத்தில் அழகான ஓவியமாக வந்திருந்த இப்படம், தமிழில் 'காதலா காதலா' மாடர்ன் ஆர்ட் போல் வெகுஜனங்களுக்குப் புரியாமல் போனதே சோகம். என்றாலும், திலீப் குமாரின் கடுமையான உழைப்பை இப்படத்தில் நன்றாகவே உணர முடிகிறது.

Related Tags : tamil cinemamaara reviewOTT
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close