'முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “தற்போது முருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள், முருகன் தமிழ்க்கடவுள் எனும் வழுக்குப்பாறையில் கால்வைத்தால், அது சனாதனம் என்ற படுகுழியில்தான் தள்ளிவிடும்.
ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்? தைப்பூசத்துக்கு மட்டும் விடுமுறை விட்டுவிட்டால், தமிழர்கள் எல்லாம் தலைநிமிர்ந்து விடுவார்களா?
குல தெய்வ வழிபாட்டையும் பெருதெய்வ வழிபாடாக மாற்றிவிட்டார்கள். எனவே, குலதெய்வ வழிபாடும் சனாதன மயமாகி வருகிறது. இந்து என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி கட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள்” என்று தொல்.திருமாவளவன் பேசினார்.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?