இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்மித் - லபுஷேன் என இருவரும் அந்த அணிக்கு 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இருப்பினும் இரண்டாவது நாளை இந்தியா தனக்கு சாதகமாகவே முடித்துள்ளது.
தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் ஷர்மாவும், கில்லும் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அப்போது சிறப்பாக களத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டனர். அவர்களை பந்துவீச்சால் வீழ்த்த முடியாவிட்டால் என்ன என வார்தைப்போரில் ஈடுபட்டு, அவர்களை எமோஷனலாக சீண்டி விக்கெட்டை வீழ்த்தலாம் என்ற யோசனைக்கு வந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
வார்த்தை போரில் ஈடுபடுவதில் அவர்கள் வல்லவர்களும் கூட என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது உண்டு. அந்த வகையில் அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் இந்தியாவின் கில் மற்றும் ரோகித்தை சீண்டினார். கில்லிடம் “உனக்கு பிடித்தது யார்? சச்சினா? கோலியா?” என்றார். அதே போல ரோகித்திடம் “கொரோனா தொற்று காரணமா தனிமைப்படுத்தப்பட்டு இருக்குற அப்போ என்ன செய்வீங்க?” என்பது மாதிரியான சீண்டல்கள் நீண்டன. கில் 50 ரன்களிலும், ரோகித் 26 ரன்களிலும் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
Marnus just wants to know who Gill's favourite player is! ? #AUSvIND pic.twitter.com/VvW7MixbQR — cricket.com.au (@cricketcomau) January 8, 2021
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி