திருச்சி மாவட்டம், லால்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(58). இவரது வீட்டின் கீழ் பகுதியில் அப்பாஸ் மகன் நத்தர்ஷா(32) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். வீட்டின் உரிமையாளரின் 9 வயது மகளும், நத்தர்ஷாவின் மகளும் அதே பகுதியில் உள்ள நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை தனது வீட்டிற்கு வந்த சிறுமியிடம் நத்தர்ஷா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் சிறுமிக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை நத்தர்ஷாவிடம் கேட்டபோது, அவரை நத்தர்ஷா குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இது குறித்த சிறுமியின் தந்தை லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை செய்து, நத்தர்ஷாமீது போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!