சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக, அவரது வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994-95 ஆம் ஆண்டு சசிகலா தாக்கல் செய்த வரிக் கணக்கு தாக்கலில் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை குறைத்து காட்டியிருந்ததாக, வருமான வரித்துறை கூறியிருந்தது. இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்த நிலையில், வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்ரமணி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதால் அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சசிகலா விடுதலையானால் அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியவர் சசிகலாதான் என்று கூறப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா விடுதலை குறித்து நேற்று பேசிய ப.சிதம்பரம், “சசிகலா வெளியில் வந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உயிர்த்தெழும் என பேசப்பட்டு வருகிறது. அதிமுக, அம்மா திராவிடம், பெரியவர், சின்னவர் திராவிடம் என நான்காக உடைய வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?