மதுரையில் மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டிக்கெட்டுகளுக்கான விற்பனை தொடங்கியுள்ளது. அதேசமயம் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர தயாராக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை மதுரையில் துவங்கியுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படத்திற்கு அதிகாலை மூன்று மணிக்கு சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படும். அதேபோல நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் ‘மாஸ்டர்‘ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக மதுரையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதித்த நிலையில் மருத்துவர்களும் மத்திய அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ரசிகர்களின் சிறப்புக் காட்சி டிக்கெட்டுகளை மதுரையில் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனால் டிக்கெட்டுகளை வாங்கியுள்ள ரசிகர்கள் 100% அனுமதி உள்ளதா அல்லது 50% அனுமதியா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு