[X] Close >

அமெரிக்காவில் தொடரும் வன்முறை... யார் காரணம்? பத்திரிகையாளர் சொல்வது என்ன?

Ongoing-violence-in-the-United-States-kills-4-people-52-people-arrested

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் நுழைந்ததால் ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயரிழந்தார். அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 3பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. இதுவரை 52பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.


Advertisement

image
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டது. இதில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. ஜோபைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 3பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் வாஷிங்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 52பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி மற்றும் பேராசிரியர் கிளாட்சம் சேவியர் ஆகியோருடன் நமது செய்தியாளர் கலந்துரையாடியதை இங்கு பார்க்கலாம்


Advertisement

image


ஸ்ரீதர் கிருஷ்ணசாமி (மூத்த பத்திரிகையாளர்)


இது போன்று கலவரம் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த எதிர்ப்பாளர்கள் எல்லாம் அவர்களாக வாஷிங்டனுக்கு வரவில்லை. வாஷிங்டன் வந்து என்னோடு சேர்ந்து போராடுங்கள் என்று ட்ரம்ப் அழைத்ததால்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பயங்கர கலவரக்காரர்கள், இவர்கள் வந்தால் ஆயுதத்தோடுதான் வருவார்கள் என்பது ட்ரம்புக்குத் தெரியும்.


Advertisement

ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து பல முயற்சிகளை ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்திலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அதனால்தான் கடைசி ஆயுதமாக இதை எடுத்திருக்கிறார். ஆனால் இதிலும் அவர் தோல்வியே அடைவார்.

image


கிளாட்சன் சேவியர் (பேராசிரியர்)


இந்த கலவரங்களுக்கு முக்கிய காரணம் ட்ரம்ப் சார்ந்துள்ள கட்சியினர் அல்ல. இதற்கு ட்ரம்பின் ஆதரவாளர்கள்தான் காரணம். ஏனென்றால் 204 வாக்குகளை பைடன் பெற்றிருந்த நிலையில் ட்ரம்ப் 157 வாக்குகள்தான் பெற்றிருந்தார். ஆனால் எல்லா இடங்களில் தோல்வியுற்ற ட்ரம்ப், ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சட்ட ஒழுங்கு நடவடிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கம்.

தலைமையின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ட்ரம்ப் இல்லை. ட்ரம்ப் ஏற்கெனவே நாங்கள் சுமூகமான மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அசிங்கப்பட்டுப்போகும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். ஏற்கெனவே இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் தற்சமயம் நடப்பதை பார்த்தால் மீண்டும் சபை கூடி பைடனின் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில்தான் இருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close