தியேட்டர்களில் 50% அனுமதி கொடுத்தால் போதும் என நடிகரும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று காலை தமிழக காவல்துறை டிஜிபியை அலுவலகத்தில் சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் "எங்களது நீண்ட கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும். ஜெயலலிதா 1994-ம் ஆண்டு தேவர் சிலையை நந்தனத்தில் திறந்து வைத்தார். கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என அறிவித்தார். அந்த அரசாணையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். இவர்களுக்கான சிறப்பு உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.
68 சீர்மரபினருக்கான ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த சொல்லி உள்ளது. இது இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதனை மாநில அரசு தொடங்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து பசும்போன் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். அதற்காக அனுமதிகோரி காவல்துறை டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்.
தமிழக முதல்வர் சென்னை வந்த பிறகு அவரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோம். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் நல்லது.
கொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்