விசாரணைக்காக காவல்நிலையம் ஆஜரான நபர் உயிரிழப்பு. உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது போலீசாரின் துன்புறுத்தலா என விசாரணை நடைபெறுகிறது.
சென்னை பழைய பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த ஏழுமலை (62) என்பவரின் மகன் நித்தியானந்தம். கடந்த ஒன்றாம் தேதி அப்பகுதியில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியை பல்லாவரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஹரிஹரன் (38) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நித்தியானந்தத்துக்கும் இளநிலை பொறியாளருடன் வாக்குவாதம் ஏற்பட்ட தகராறில் நித்தியானந்தம், இளநிலை பொறியாளரை தாக்கியதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து நித்தியானந்தம் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரது தந்தை ஏழுமலையை பல்லாவரம் போலீசார் தினந்தோறும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வந்தனர். சி.எஸ்.ஆர் மட்டும் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தினங்களுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று வழக்கம் போல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ஏழுமலை விசாரணையின் போதே காவல் நிலையத்தில் வாந்தி எடுத்து சற்று நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?